ஆரோக்கிய உணவு

இந்த கறியுடன் அகத்திகீரையை ஒருபோதும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்கும் அபாயம்..!

சித்த மருத்துவம் கொண்ட அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவீதம் புரதச்சத்து 1.4 சதவீதம் கொழுப்புச்சத்து 3.1 சதவீதம் தாது உப்புகள் மட்டுமின்றி மாவுச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ சி ஆகிய சத்துகளும் உள்ளன.

பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை பூ பட்டை வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன.

அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.

சுத்தம் செய்யப்பட்ட அகத்தி கீரையுடன் சின்ன வெங்காயம் மிளகு சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்புண் சரியாகும். இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசி வந்தால் விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்து தடவி வந்தால் விரைவில் ஆறும்.

அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.

அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.

தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெயை விட்டு வதக்கி விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.

அகத்திக் கீரையைப்போல அவற்றின் பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தலைசுற்றல் சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்சினைகள் சரியாகும்.

அகத்திப்பூவுடன் மிளகு சீரகம் ஓமம் பூண்டு வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு கட்டுக்குள் வரும்.

மருந்துகளை முறிக்கும் தன்மை அகத்திக்கு உண்டு. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக்கூடாது. பொதுவாக இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக்கூடாது.

அப்படிச் சாப்பிட்டால் மருந்தாக செயல்படவேண்டியது அதற்கு எதிராக செயல்பட்டு சொறி சிரங்கை ஏற்படுத்திவிடும் என்பார்கள்.

அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button