அசைவ வகைகள்

சைடிஷ் நண்டு பொடிமாஸ்

சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள நண்டு பொடிமாஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த நண்டு பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான சைடிஷ் நண்டு பொடிமாஸ்
தேவையான பொருட்கள் :

பெரிய நண்டு – அரை கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தட்டிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எலுமிச்சை ஜூஸ் – சிறிது.
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்.

செய்முறை :

நண்டை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதம் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும்.

அடுத்து அதில் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை, தேவைக்கு உப்பு போட்டு நன்றாக பிரட்டி 5 நிமிடம் வேக விடவும். பிரட்டும் போதே உதிர்ந்து விடும்.

கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான நண்டு பொடிமாஸ் தயார்.
201707201259231639 Shredded crab Crab puttu Crab podimas SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button