ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்கும் 10 அருமையான உணவுகள்!!!

கண்ணில் கண்டதையெல்லாம் தின்று தேவையில்லாமல் உடல் எடையைத் தாறுமாறாக ஏற்றிவிட்டு, பின்னர் வருந்தி அவஸ்தைப்படுபவர்கள் ஏராளம்! மேலும் அத்தகையவர்கள் அந்த எடையை எப்படி குறைக்கலாம் என்று கிடந்து அல்லாடுவார்கள்.

அதற்காக திடீரென்று உணவைக் குறைப்பார்கள். பட்டினி கூட இருப்பார்கள். வாக்கிங் போவார்கள்; ஜாக்கிங் செய்வார்கள்; காலையிலோ, மாலையிலோ ஓடவும் செய்வார்கள். ஆனால் எல்லாம் சில நாட்களுக்குத் தான். பிறகு, வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.

ஆனால் சில உணவுப் பொருட்களைக் கொண்டே நிறையக் கலோரிகளை எரித்து, நம் எடையை நன்றாகக் குறைக்க முடியும். அவை எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகின்றன. இதுப்போன்ற உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டாலே போதும். அதே நேரத்தில் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்ய வேண்டும். இங்கு அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா?

திராட்சை

திராட்சைப் பழங்கள் நம் உடலின் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தி, ஏராளமான கலோரிகளைக் கரைக்க உதவுகின்றன. இதில் நிறைய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைச் சீராக வைக்க முடியும். திராட்சை சாப்பிடுவதால் வயிறும் வேகமாக நிரம்பிவிடும். இதைப் பச்சடியில் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் செய்து குடிக்கலாம்.

செலரி கீரை

இந்த செலரி கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் உணவைக் கட்டுப்படுத்த முடியும். இதில் கலோரியும் குறைவாக உள்ளது. செலரி கீரையை மற்ற உணவுகளோடு சேர்த்துச் சாப்பிடுவது நலம்.

முழு தானியங்கள்

பதப்படுத்தப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் நமக்கு மிகவும் நல்லது. இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம். ஆனால் கொழுப்பு குறைவு தான்! இவை நாள்பட்ட வியாதிகளையும் குறைக்க வல்லவை. இவை மெதுவாகவே செரிக்கும் என்பதால், நமக்கு நீண்ட நேரத்திற்குப் பசி எடுக்காது.

க்ரீன் டீ

இப்போதெல்லாம் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட க்ரீன் டீ, எப்போதுமே நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்த, உடல் எடையைக் குறைக்க என்று இதன் நன்மைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

இது கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அமிலம். மெட்டபாலிசத்தை நிலைப்படுத்துவதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மன், ஹெர்ரிங், டுனா போன்ற மீன்களில் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகுந்து உள்ளது.

காபி

காபியைப் பற்றி நமக்குச் சொல்லவே வேண்டாம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காபி இல்லாவிட்டால் ஒன்றுமே ஓடாது. இது இதயத் துடிப்பைச் சீராக்குகிறது; இரத்தத்தில் அதிக பிராண வாயுவைக் கொண்டு சேர்க்கிறது; நிறையக் கலோரிகளையும் எரிக்கக் கூடியது.

அவகேடோ/வெண்ணெய் பழம்

இதுவும் நம் உடலில் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தி, நமக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் செல்களைக் காக்கிறது. மேலும், கொழுப்புச் சத்தைக் குறைக்கவும், காயங்களை ஆற்றவும், இதய நோய்களைக் கட்டுப்படுத்தவும் வெண்ணெய் பழம் உதவுகிறது. அதுமட்டுமல்ல, இது கண்களுக்கும் கேசத்திற்கும் கூட நல்லது. சில தக்காளிப் பழங்களுடன் அரை வெண்ணெய் பழத்தை சேர்த்து, உப்பு கலந்து சாப்பிட்டால், அதை விட நமக்குக் காலை உணவு வேறெதுவும் தேவையில்லை.

கார வகை உணவுகள்

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உணவில் காரம் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கலோரிகளை எரிக்கலாம்.

சியா விதைகள்

சியா விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்தால், கால் மணி நேரத்திலேயே அவை நன்றாக உப்பிக் கொண்டு வரும். பச்சடி, தயிர் அல்லது ஓட்மீலில் கலந்து சியா விதைகளை சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். இவற்றில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 ஆகியவை அதிகம். இவையும் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பைக் குறைக்க வல்லவை.

பிரேசில் நட்ஸ்

கலோரியை எரிப்பதில் இந்த பிரேசில் நட்ஸ்களுக்கு அதிகப் பங்கு உள்ளது. மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. அதிலும் ஏலக்காய் மற்றும் வென்னிலா எசன்ஸ் கலந்து பிரேசில் நட்ஸ் பால் குடிக்கலாம். இல்லாவிட்டால், பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றுடன் பிரேசில் நட்ஸ்களை சேர்த்து சாப்பிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button