ஆரோக்கிய உணவு

பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக பூண்டு, வெங்காயம் இரண்டுமே உணவிற்கு அதிமுக்கிய உணவுப் பொருளாக கருதப்படுகின்றதுஇ இவற்றின் ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும் சமையலுக்கு சுவை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பூண்டும் , வெங்காயமும் பல வகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதை தினசரி பயன்பாட்டிற்கு உட்கொள்வது நல்லதல்ல.

இதனை அதிகம் எடுத்து கொள்வது ஆபத்தை தான் விளைவுக்கும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பூண்டு மற்றும் வெங்காயம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

சிலருக்கு அதிக பூண்டு அல்லது வெங்காயம் ஒவ்வாமையை உண்டாக்கும். அதன் அறிகுறியாக நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, வயிறு அசௌகரியம், குடல் எரிச்சல், வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

பூண்டை அதிகமாக உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது மூளைக்கு விஷம். இதில் இருக்கும் sulphone hydroxyl ion என்னும் மூலக்கூறானது மூளை நரம்புகளுக்கு நஞ்சு விளைவிக்கக்கூடியது. இவை மூளைக்கான இரத்த ஓட்டத்தை தடை செய்யக் கூடும்.

இதனால் எதிர்மறை சிந்தனைகள், மனப்பதட்டம், கோபம், பாலியல் ஆசை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் அதிகமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button