Other News

‘2 கிமீ சாலைக்கு ரூ.500 கோடியா? விளாசிய காயத்ரி ரகுராம்!

தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் மீது கட்சி தொடர்ந்த வழக்கை அடுத்து பாஜகவில் இருந்து விலகினார். காயத்ரி ரகுராம் முதலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை விமர்சித்தார், ஆனால் சமீபகாலமாக ஒட்டுமொத்த பாரதிய ஜனதா கட்சியையும் விமர்சித்தார்.

அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசிய அமித்ஷாவுக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த வாரம் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்ட சம்பவத்தை பேசியதையும் விமர்சனம் செய்திருந்தார் காயத்ரி ரகுராம்.

மொட்டையடித்து வீடியோ வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம்…

இந்நிலையில் சிஏஜி அறிக்கையை வைத்து மத்திய அரசான பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார் காயத்ரி ரகுராம். அதாவது சிஏஜி எனும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18.20 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – ஹரியானா குருகிராமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH-48-ல் நெரிசலை குறைக்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலையில் இந்த மோசடி நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதனை வைத்து பாஜக விளாசியுள்ளார் காயத்ரி ரகுராம்.

இளம் நடிகையுடன் நெருக்கமாக இருந்த நடிகர் உதயநிதி மகன் இன்பநிதி … வெளுத்துவாங்கிய பிக்பாஸ் சர்ச்சை நாயகி …..

ஏன் இவ்வளவு கொள்ளை, பாரதிய ஜனதா கட்சி 2024ல் தோற்கடிக்கப்படுமா என்று மக்கள் யோசித்து வருகின்றனர். அப்படியானால் நீங்கள் கொள்ளையடிக்கிறீர்களா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பிரமுகர் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button