ஆரோக்கிய உணவு

இந்த பழத்தை இவர்கள் மட்டும் சாப்பிட கூடாதாம்!

கொளுத்தும் வெயில் நேரத்தில் தர்பூசணி பழத்தை எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டு கொண்டே இருக்கலாம் என தோன்றும்.

ஏனெனில் கோடை காலத்தில் உடலுக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய பழங்களில் ஒன்று தான் தர்பூசணி.

தர்பூசணியில் கிட்டதட்ட 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து தான் உள்ளது. நல்ல இனிப்பு சுவையுடன் இருக்கும் தர்பூசணிiய அதிகமாக சாப்பிட்டால் அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதயம்

தர்பூசணியில் மிக அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் பற்றாக்குறை எப்படி உயர் ரத்த அழுத்தத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறதோ அதோபோல அதிகப்படியான பொட்டாசியம் இதயத் துடிப்பை சீரற்றதாக வைத்திருக்கும். இதயத் துடிப்பை வேகப்படுத்தும்.இதனால் தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இதயப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

 

வீக்கம்

உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் தர்பூசணியை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் அதீத சோர்வடையும். கை, கால் உடல் வீக்கப் பிரச்சினைகள் உண்டாகும் என்பதை மறவாதீர்கள்.

கல்லீரல்

ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்கிறவர்கள் தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக , மது அருந்தும் நாட்களில் தர்பூசணி எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி அதிகம் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளை உண்டு செய்யும்.

 

நீரிழிவு

தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. ஆனால் மீதி 10 சதவீதத்தில் அதிக அளவிலான சர்க்கரையும் இருக்கிறது. தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணியை மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜீரண மண்டலம்

அதிகமாக தர்பூசணி எடுத்துக் கொண்டால் நீர்ச்சத்து மட்டும் கிடைக்காது. அது வயிற்று உப்பசத்தையும் ஏற்படுத்தும். அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதிலுள்ள கார்கோஹைட்ரேட் உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும். மேலும் செரிமான ஆற்றலைக் குறைத்து அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button