ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…வெந்நீர் குடித்தால் உணவுக்குழாய் பாதிக்குமா?

கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அச்சத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் தண்ணீரை காய்ச்சி சூடாக பருகுகிறார்கள். அப்படி சூடான நீரை பருகுவதால் ஏற்படும் சாதக- பாதகங்கள்:

நன்கு காய்ச்சிய நீரில் இருந்து வெளிப்படும் நீராவியை ஆழமாக உள்ளிழுத்து சுவாசிப்பது மூக்கடைப்புக்கு நிவாரணம் தரும். சைனஸ் தொந்தரவுகளை போக்கும். சைனஸ் தலைவலி பாதிப்பில் இருந்து விடுபடவும் உதவும். சைனஸ் பிரச்சினையை எதிர்கொண்டவர்களுக்கு தொண்டை முழுவதும் சளி சவ்வுகள் படர்ந்திருக்கும். சூடான நீரை பருகுவது அந்த பகுதியை சூடாக்க உதவும். சளி, தொண்டை வலியையும் போக்கும். மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு சூடான நீர் நிவாரணம் தரும். அறை வெப்பநிலையை கொண்ட பானத்தை விட சூடான பானம் பருகுவது தொண்டைக்கு இதமளிக்கும்.

சூடான நீர் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் அதுபற்றி கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதேவேளையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் இயக்க செயல்பாட்டிற்கு சூடான நீர் சாதகமாக அமைந்திருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சூடான நீராக இருந்தாலும், குளிர்ந்த நீராக இருந்தாலும் அதனை போதுமான அளவு பருகவேண்டும். பருகாவிட்டால் நரம்புமண்டல செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். மன நலன் மற்றும் மூளையின் செயல்பாடுகளிலும் பின்னடைவு ஏற்படும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எந்த வெப்பநிலை கொண்ட நீராக இருந்தாலும் அதனை பருகுவது நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். பெண்கள் தினமும் 2.3 லிட்டர் நீரும், ஆண்கள் 3.3 லிட்டர் நீரும் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் பருகுவது அவசியம். சூடான நீரை பருகி அந்த நாளை தொடங்குவது சிறப்பானது. உடலின் ஒவ்வொரு அத்தியாவசிய செயல்பாட்டுக்கும் தண்ணீர் தேவை. உடற்பயிற்சி செய்பவர்கள் சூடான நீர் பருகுவது அவர்களது உடல் வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவுகிறது.

மிதமான சுடுநீரில் குளிப்பது ரத்த ஓட்டம் துரிதமாக செயல்பட உதவும். தமனிகள், நரம்புகள் விரிவடைந்து உடல் முழுவதும் ரத்த ஓட்டம் செல்லும் திறனும் மேம்படும். இரவு நேரத்தில் வெந்நீரில் குளியல் போடுவது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.

கொதித்த நீரை ஆறவைத்து பருகுவது, ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்யும். சிறுநீரகங்களையும் பாதுகாக்கும்.

மிகவும் சூடாக இருக்கும் தண்ணீரை பருகுவது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். சுவை மொட்டுகளை சிதைக்கலாம், எனவே வெந்நீர் குடிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். 130 டிகிரி பாரன்ஹீட் முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலை சூடான பானங்களுக்கு ஏதுவானது. அதற்கு மேலும் வெப்பநிலை அதிகரித்தால் சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகும்.

Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button