சட்னி வகைகள்

வரமிளகாய் சட்னி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

* சின்ன வெங்காயம் – 1/2 கப்

* தக்காளி – 1

* வரமிளகாய் – 2

* காஷ்மீரி வர மிளகாய் – 2

* புளி – 1 டீஸ்பூன்

* கல் உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]chettinad varamilagai chutney 1611056884

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி, வர மிளகாய், காஷ்மீரி வர மிளகாய், புளி மற்றும் கல் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காய மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளறி, பத்து நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* பிறகு மூடியைத் திறந்து, பச்சை வாசனை போயுள்ளதா என்பதைப் பார்த்து, பச்சை வாசனை இருந்தால், மீண்டும் 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

* இப்போது சுவையான செட்டிநாடு வரமிளகாய் சட்னி தயார்.

* இந்த கார சட்னி இட்லி, தோசை, பனியாரம் என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

குறிப்பு:

* உங்களிடம் காஷ்மீரி வரமிளகாய் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் இந்த வகை மிளகாய் சட்னிக்கு நல்ல நிறத்தை அளிப்பதோடு, சட்னியின் காரத்தையும் குறைக்கும்.

* இந்த சட்னிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் சட்னிக்கு நல்ல ஃப்ளேவரைத் தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button