ஆரோக்கிய உணவு

உங்களது “மூட்”-ஐ உடனடியாக அதிகரிக்கும் உணவுகள்!!!

உங்களுக்கு தெரியுமா? சில உணவுகள் உங்களது மனநிலையை நல்ல முறையில் மேலோங்க சிறந்த முறையில் உதவுகிறது. இந்த உணவுகள் உங்கள் மனநிலையை மேலோங்க உதவும் செரட்டோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றின் அளவை அதிகரித்து, இயற்கையான முறையில் இம்மாற்றத்தை நிகழ வைக்கிறது.

இதனால் மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் சரியான தீர்வுக் காண முடியும். மற்றும் சில உணவுகள் உங்கள் உடல் சக்தி அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கூடுதல் பயனளிக்கிறது…

துருக்கி கோழி துருக்கி கோழி உட்கொள்வதால் நமது உடலில் செரட்டோனின் உருவாகிறது. இந்த செரட்டோனின் நியூரோட்ரான்ஸ்மிட்டர் எனப்படும் நரம்பியகடத்துகையை அதிகரிக்கிறது. சீரான முறையில் துருக்கி கோழி உண்டு வந்தால். மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைந்து உங்கள் மனநிலை சீராகும்.

தேன் தேன், மனநிலையை தூண்டிவிடும் ஓர் சிறந்த உணவுப் பொருளாகும். தேனில் இருக்கும் இனிப்பு உடனடியாக மனநிலையை சீராக்கும் தன்மை கொண்டதாம். மேலும் இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும்.

தயிர் தயிரில் இருக்கும் கால்சியம், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. மற்றும் இது நியூரோட்ரான்ஸ்மிட்டர் எனப்படும் நரம்பியகடத்துகையை உருவாக்கி உற்சாகம் அடைய செய்கிறது.

டார்க் சாக்லேட் இது உங்களது மனநிலையை மேலோங்க செய்ய உதவும் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. டார்க் சாக்லேட் சாப்பிடும் போது "Endomorphine" வெளிப்படுகிறது. இது, செரட்டோனின் அளவு அதிகரிக்க செய்வதால் மனநிலை மேலோங்கும் மற்றும் பதட்டத்தை குறைக்கும்.

தக்காளி தக்காளியில் லைகோபீன் அதிகம் இருக்கிறது. இது மனநிலை மேலோங்க உதவகிறது. மற்றும் இதிலிருக்கும் போலேட், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை மனநிலையை மேலோங்க வைக்கும் செரட்டோனின் மற்றும் டோபமைன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

முட்டை முட்டையில் உயர்ரக புரதச்சத்து இருக்கிறது. தினமும் முட்டை சாப்பிடுவது உங்கள் மனநிலையை மேலோங்க செய்வது மட்டுமின்றி உங்களது உடல் சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. மற்றும் இது, மன அழுத்தம், பதட்டம் குறையவும் உதவுகிறது.

ஓட்ஸ் மனநிலையை மேலோங்க உதவுவதில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாகும். தினமும் ஓட்ஸ் உண்பது மெல்ல, மெல்ல உங்கள் மனநிலை மேலோங்க உதவுகிறது. மற்றும் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் பயன் தருகிறது.

வாழைப்பழம் வாழைப்பழத்தில் உயர்ரக வைட்டமின் ஏ, பி,6 மற்றும் சி இருக்கிறது. இதுவும் உங்கள் மனநிலை மேலோங்க நல்ல முறையில் உதவுகிறது. இது மனநிலையை மேலோங்க வைப்பது மட்டுமின்றி நல்ல உறக்கத்தையும் தரவல்லது.

01 1441103147 8eightfoodsthatenhanceyourmoodinstantly

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button