சட்னி வகைகள்

வாழைத்தண்டு சட்னி

தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு – 200கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
தயிர் – 100 மி.லி
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை எடுத்து விடவும்.
* வாழைத்தண்டு, தேங்காய்துருவல், பச்சைமிளகாய் போன்றவைகளை எல்லாம் மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் உப்பு, தயிர் சேருங்கள்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வாழைத்தண்டு கலவையில் கொட்டுங்கள்.
* இதை விரைவாக தயாரித்துவிடலாம். இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அதிக சுவைதரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்தின் தேவைக்கு இதனை சாப்பிடலாம்.J3HTeVW

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button