சாலட் வகைகள்

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்

சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த அருமையான உணவை காலையில் எடுத்து கொள்ளலாம். இப்போது இந்த ஓட்ஸ் பழ சாலட்டை செய்து எப்படி என்று பார்க்கலாம்.

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்
தேவையான பொருட்கள் :

மாம்பழம், ஆப்பிள், பேரீச்சை, மாதுளை, வாழைப்பழம் சேர்ந்த கலவை – 2 கப்
பால் 2 கப்
ஓட்ஸ் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
தேன் – 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 2 மேசைக்கரண்டி

செய்முறை :

* பழங்களை தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கும்போது ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும்.

* ஓட்ஸ் வெந்தவுடன் இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும்.

* இந்த ஓட்ஸ் கலவையில் பழங்கள், திராட்சை, தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* அதை கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழங்கள், வாழைப்பழங்களை நீக்கி விடவும். விரும்பிய பழங்களையும் இதில் சேர்த்து கொள்ளலாம். 201702151303354951 oats fruits salad SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button