மருத்துவ குறிப்பு

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள்!!!

சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் எற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட…

இனி, சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள் குறித்து காணலாம்….

சர்க்கரைவள்ளி கிழங்கு

பழங்காலம் முதல் மனிதர்கள் சாப்பிட்டு வந்த இயற்கை உணவுப் பொருள் தான் சர்க்கரைவள்ளி கிழங்கு. கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது.

காரட்

காரட் தினமும் சாப்பிட வேண்டிய காய்கறி வகை ஆகும். காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றது என்று கூறுவார்கள். காரட் உங்கள் உடல்நலத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது. மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.

இலவங்கப்பட்டை

இலவங்கப் பட்டை பண்டைய காலம் முதல் நாம் உணவில் சேர்த்து வரும் மருத்துவ நன்மை கொண்ட உணவுப் பொருள் ஆகும். பண்டைய காலத்து மக்கள் இதை பாக்டீரியாக்களை எதிர்த்து போராட இலவங்கப் பட்டையை உணவில் பயன்படுத்தினர். சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது இலவங்கப் பட்டை

தயிர்

தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும். இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும்.

முள்ளங்கி

மண்ணில் விளையும் காய்கறியில் சிறந்ததொரு உணவுப் பொருள் முள்ளங்கி. அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவார்கள். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது.

தண்ணீர்

உணவை தவிர, தண்ணீரும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தண்ணீர் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

11 1436604225 6fivefoodsthatfightutis

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button