ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்… அதன் நன்மைகளும்…

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவிற்கு சுற்றுலாவிற்கு வரும் மக்கள், தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு உணவுகள் எனலாம். ஏனெனில் உலகிலேயே தமிழ்நாட்டு உணவுகள் மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

 

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காலங்காலமாக காலை வேளையில் சமைத்து சாப்பிடும் உணவுகள் ஒவ்வொன்றிலும் நன்மைகள் நிறைந்துள்ளன. இதற்கு அதில் சேர்க்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, அதை சமைத்து சாப்பிடும் விதம் எனலாம்.

 

இங்கு தமிழ்நாட்டில் காலை வேளையில் சமைத்து சாப்பிடும் மிகவும் பிரபலமான சில காலை உணவுகளும், அதன் நன்மைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா…?

இட்லி

தமிழ்நாட்டில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் இட்லி, உலகளவில் மிகவும் சிறப்பான காலை உணவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இட்லியை காலையில் சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், அத்தியாவசிய கலோரிகள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அன்றைய பொழுது நன்கு ஆரோக்கியமாக செல்லும்.

தோசை

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்று தோசை. இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் இது எளிதில் செரிமானமாகக்கூடியது. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை உணவும் கூட.

வெண் பொங்கல்

வெண் பொங்கலும் தமிழ்நாட்டில் காலை வேளையில் செய்து சாப்பிடும் ஒரு காலை உணவு. இதில் கலோரிகள் அதிகமாகவும், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பழைய சோறு

அக்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் பழைய சாதத்தை தான் பெரும்பாலும் காலை உணவாக எடுத்து வந்தார்கள். அதனால் தான் கடுமையாக உழைக்க தேவையான ஆற்றல் கிடைத்தது. மேலும் இன்றும் கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் காலை உணவாக பழைய சோறு தான் எடுத்து வருகிறார்கள். முக்கியமாக பழைய சோறு உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, உடலுக்கு ஆற்றலையும் வழங்கும்.

ராகி கூழ்

தானியங்களில் ஒன்றான ராகியைக் கொண்டு கூழ் செய்து காலை வேளையில் உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் தீரும். மேலும் ராகி கூழ் எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும். மேலும் உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறையும்.

சுடு கஞ்சி

காலையில் ஒரு கப் கஞ்சி சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதற்கு அதில் உள்ள கார்போஹைட்ரேட் தான் காரணம். அதிலும் ஜிம் சென்று உடல் தசையை அதிகரிக்க விரும்புவோர், காலையில் கஞ்சி குடிப்பது நல்லது.

கம்மங்கூழ்

கம்பு கொண்டு செய்யப்படும் இந்த கூழ், உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும். மேலும் இதனை காலையில் குடித்து வந்தால், இதயம், செரிமானம் ஆரோக்கியமாக செயல்படுவதோடு, புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.

இடியாப்பம் தேங்காய் பால்

இட்லியைப் போன்று ஆவியில் வேக வைத்து செய்யப்படும் இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவுகளுள் ஒன்று. மேலும் இது பலருக்கும் பிடித்த காலை உணவும் கூட. இதனை உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாது, மேலும் விரைவில் பசி எடுக்க ஆரம்பிக்கும்.

கோதுமை ரவை உப்புமா
கோதுமை ரவையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு செய்யப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இது பல்வேறு காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால், ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதாகவும் இருக்கும்.

Related Articles

7 Comments

  1. தமிழ் நாட்டில் மட்டுமல்ல எங்கள் மட்டக்களப்பு மக்களும் காலை உணவாக உண்ணுகின்றோம். அருமையான ஆரோக்கியமான உணவு இது என்றால் மிகையாகாது.

  2. சும்மா தமிழ்நாடு மட்டக்களப்பு என்று மட்டுப்படுத்தாம தமிழர்களின் பாரம்பரிய உணவு என்றால் என்னவாம் !

  3. இணையதள வேலை வாய்ப்பு. அரசு அங்கீகாரம் பெற்ற கம்பெனி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தேவை இருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள். இல்லை என்றால் மற்ற வர்களுக்கு பகிரவும்.
    நன்றி.
    Interested person yes
    Reply.
    ✅https://wa.me/919344213869?text=whatsapp°me

  4. உப்பு கருவாடு
    ஊறவச்ச சோறு
    சிறு வெங்காயம்
    அருந்தினால் தெரியும் ஜோறு

  5. இடியாப்பம் சரி தேங்காய் பால் அது உண்மை கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button