ஆரோக்கிய உணவு

மீன் சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் இந்த அபாயங்களை பற்றி தெரியுமா?

மீன் சாப்பிடுவதன் மூலம் உண்டாகும் இந்த அபாயங்கள்- வீடியோ
இந்த செய்தியானது கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கான ஒன்று… உங்களுக்கு பிடித்தமான இந்த கடல் வாழ் உயிரணங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. மீன் போன்ற கடல் வாழ் உயிரிணங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதில் n-3 என்ற பாலி அன்சாட்டுரேட்டேட் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. மேலும் இதில் மைக்ரோ ஊட்டச்சத்துகளான செலினியம், அயோடின், பொட்டாசியம், விட்டமின் ஏ, பி(12), டி மற்றும் இ ஆகியவை உள்ளது. மேலும் குறைந்த அளவு சோடியம் உள்ளது.

கடல் உணவுகளில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருந்தாலும் கூட, இதில் உள்ள இரசாயன கலப்படம் காரணமாக நமக்கு ஆரோக்கிய குறைப்படுகளும் கூட ஏற்படுகின்றன. அதை எல்லாம் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

கன உலோகங்கள் இருக்கலாம் சில வகை மீன்களில் கன உலோகங்கள் காணப்படுகின்றன. இவை மார்லின், டுனா, சுறா போன்ற மீன்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவை சுற்றுச்சூழல் கேடுகளினால் உண்டாகும் விளைவாகும். கடலில் கலக்கும் இரசாயண கழிவுகள், கனரக உலோகங்கள், பெயிண்ட் போன்றவற்றினால் இந்த விளைவு உண்டாகிறது. இவ்வாறு மீன்களின் உடலில் இந்த வகை மாற்றங்கள் உண்டாவதால், மீன் சாப்பிடுவதால் கார்டிவாஸ்குலர் இருதய நோய் குணமாகும் என்ற ஒரு கோட்பாடு பொய்யாகிறது. மேலும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது.

ஓட்டுண்ணிகள் உள்ளன நாம் செய்யும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடலில் கிடைக்கும் மீன்களில் ஓட்டுண்ணிகள் வளர தொடங்கிவிடுகின்றன. இதற்கு காரணம் வீடுகள் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இருந்து வரும் கழிவு நீரானது கடலில் கலப்பதே ஆகும். இதனால் முழுமையாக சமைக்கப்படாத மீன்களை சாப்பிடும் போது, வயிற்றுப்போக்கு, கல்லீரல் குறைபாடுகள், முன்கூட்டியே சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன.

பாக்டீரியா தொற்றுக்கள் விப்ரியோ, சால்மோனெல்லா, ஷிகெல்லா, குளோஸ்டிரீடியம் போட்டினினம், ஸ்டாஃபிலோகோக்கஸ் ஆரியஸ் போன்ற இனங்களை சேர்ந்த பாக்டீரியாக்கள் கடல் வாழ் உயிரணங்களை மாசுபடுத்துகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், வாந்தி போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

வைரஸ் பாதிப்புகள் கடல் வாழ் உயிரிணங்கள் வைரஸ் தாக்குதல்களுக்கும் கூட ஆளாகின்றன. இவை நோரோவியஸ் மற்றும் ஹீபிடிடிஸ் A என்ற கல்லீரலை தாக்கும் வைரஸ்களால் தாக்கப்படுகின்றன. இந்த வைரஸ் பொதுவாக காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, உடல்வலி போன்றவைகளுக்கு காரணமாகின்றன. இது கல்லீரல் செயலிழப்பை உண்டாக்குவது மிகவும் குறைவு தான்.

மனிதனால் உருவாக்கப்பட்ட நச்சுக்கள் சில கடல் வாழ் உயிரணங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட கழிவுகளை சாப்பிடும் போது அதன் உடல் பாதிக்கப்படுகிறது. நமது உடலில் சேர்ந்திருக்கும் பெரும்பான்மையான நச்சுக்கள் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக தான் உள்ளே செல்கிறது. பால் பொருட்கள் இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிடுவதினாலும் உடலில் நச்சுக்கள் சேர்கின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட நச்சுக்களை சாப்பிட்ட கடல் வாழ் உயிரிணங்களை நாம் சாப்பிடும் போது நமது உடலில் நச்சுக்கள் சேர்கின்றது. இந்த இராசாயணங்கள் நமது கல்லீரலில் பாதிப்பை உண்டாக்கும். ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் கேன்சருக்கான அபாயத்தை கூட தூண்டும் தன்மை உடையது.

தவிர்ப்பது எப்படி சுறா மீன், கிங் பிஷ் போன்றவற்றை ஒரு அளவுக்கு மேல் சாப்பிடாதீர்கள். இதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க நன்றாக சமைக்கப்பட்ட மீன்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.

09 1512802571 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button