ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும்?

இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. பெரும்பாலான தம்பதிகள் தனிக்குடித்தனம் தான் இருக்கிறார்கள். இதனால் முதல் முறையாக தாயாகி இருக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து, 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க யாருக்கும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

Food Chart For Your Baby
அப்படி தனியாக இருக்கும் தம்பதிகளுக்கு, இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது தான். ஆனால் குழந்தைகள் வளர வளர அந்த தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. எனவே எப்போது திட உணவுகளைக் கொடுக்க வேண்டும், எப்போது ஜூஸ் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக குழந்தைக்கு எந்த ஒரு உணவைக் கொடுப்பதற்கு முன்னும், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை இல்லாமல் எதுவும் கொடுக்கக்கூடாது.

மாதம் 1

முதல் மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முக்கியமாக முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

மாதம் 2

குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

மாதம் 3

மூன்றாவது மாதத்திலும் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

மாதம் 4

குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் பழச்சாறுகளைக் கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. முக்கியமாக ஏதாவது ஒரு ஜூஸைத் தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அதுவும் வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.

மாதம் 5

ஐந்தாவது மாதத்தில் மருத்துவரை சந்தித்து, குழந்தைக்கு மெதுவாக திட உணவுகளைக் கொடுக்கலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். கொடுக்கலாம் என்று மருத்துவர் கூறினால், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை அரைத்து, வேண்டுமானால் சிறிது தாய்ப்பால் சேர்த்து கலந்து குழந்தைக்கு சிறிது கொடுக்கலாம். பழங்களைக் கொடுக்க நினைத்தால், அந்த பழத்தை நன்கு அரைத்து பின் கொடுங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மாதம் 6

உங்கள் குழந்தை ஒருசில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் குழந்தைக்கு கொடுக்காதீர்கள். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை அரைத்தும் கொடுக்கலாம்.

மாதம் 7

குழந்தை பிறந்து ஏழு மாதம் ஆகிவிட்டால், நன்கு பேஸ்ட் செய்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம். குழந்தைக்கு எது கொடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

மாதம் 8-9

குழந்தை பிறந்து 8-9 மாதம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இதுவரை கொடுத்த உணவின் அளவை விட, சற்று அதிகமாகவே உணவுகளை கொடுக்கலாம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கண்ட உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி கொடுத்துவிடாதீர்கள். குறிப்பாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மாதம் 10-12

இந்த மாத குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button