ஆரோக்கிய உணவு

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்…

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்கிறது. இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு: பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கில் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்லும்.

தக்காளி: தக்காளியில் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது. அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். ஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரிக்கும்.
vegetable
ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

செர்ரி: செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் விஷத்தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.

பாதாம்: கசப்பு தன்மை கொண்ட பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம். ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.

காளான்: காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், உயிரை விட நேரிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button