சைவம்

தயிர்சாதம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி : 1/2 cup
தண்ணீர் : 1 3/4 cup
பால் : 1 1/2 cup
உப்பு :3/4 tsp ( adjust )
பெருங்காயம் : ஒரு சிட்டிகை ( விரும்பினால் )
இஞ்சி : சிறு துண்டு, பொடியாக நறுக்கவும்
தயிர் : 1/4 Tsp

தாளிக்க :
கடுகு : 1/2 tsp
சிகப்பு மிளகாய் : 1 கிள்ளி வைக்கவும் ( விரும்பினால் )
பச்சை மிளகாய் : 1 பொடியாக நறுக்கவும்
கறுவேப்பிலை : 10 to 12
எண்ணெய் : 1 tsp

அலங்கரிக்க :
சிறிதளவு காரட், மாதுளை முத்துக்கள், திராட்சை [ விருப்பப்பட்டால் ]

செய்முறை :
குக்கரில் அரிசியை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீர் மற்று உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தி அதிக தீயில் வேக விடவும்.
மூற்று விசில் வந்த பின்னர் தீயை குறைத்து மேலும் 5 நிமிடம் வேக விடவும்.

குக்கரில் சாதம் வெந்து கொண்டிருக்கும் போது,

மற்றொரு அடுப்பில் பாலை பொங்க விட்டு இறக்கி தனியே வைக்கவும்.

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து கடுகு வெடிக்க விட்ட பின்னர் சிகப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை தாளித்து எடுத்து வைக்கவும்.

குக்கர் ஆவி அடங்கியவுடன் திறந்து கரண்டியால் நன்கு மசித்தபடி கலக்கவும்.
பின்னர் பாலை விட்டு கிளறவும்.

கடைசியாக தாளித்த பொருட்கள், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் தயிர் விட்டு கலந்து விடவும்.

அவரவர் சுவைக்கேற்றவாறு உப்பு சரி பார்த்துக்கொள்ளவும்.

மதிய உணவிற்கோ அல்லது பயணத்திற்கோ எடுத்து செல்வதாக இருந்தால் டிபன் டப்பாவில் எடுத்து வைக்கவும். சுமார் 4 அல்லது 5 மணிநேரம் கழித்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும்.

ஊறுகாயுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
சிறிது நேரத்திற்குள்ளாகவே சாப்பிட தேவை என்றால் தயிரை சிறிது அதிகமாக விட்டு தயிர் சாதத்தை கலக்கி வைக்கவும்.

தயிர் சாதத்தின் சுவையை மேலும் கூட்ட வேண்டுமெனில் சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
curd%2Brice%2B2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button