ஆரோக்கிய உணவு

தாய்மார்கள் எடுத்து கொள்ளும் மீன் எண்ணெய் மாத்திரைகள் குழந்தைகளின் உணவு அழற்சியை தடுக்குமா?

தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் மீன் எண்ணெய்

மாத்திரைகள் குழந்தைகளின் உணவு அழற்சியை தடுக்குமா? தெரிஞ்சுக்க இத படிங்க

கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் தினமும் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்தால் குழந்தையின் உணவு அழற்சி தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாய்ப்பாலூட்டுவதும் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் அழற்சியை தடுக்கிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள இம்பெரல் கல்லூரி நடத்திய ஆராய்ச்சி படி பார்த்தால் ஒரு வயது ஆன குழந்தைகளுக்கு ஏற்படும் முட்டை அழற்சியை 30% வரை இந்த முறையை கொண்டு தடுக்கலாம் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மீன் எண்ணெய்யில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது.

Fish oil supplements in pregnancy ‘may reduce allergies
இதை ஒரு தொடர்ச்சியான செய்முறைகளின் மூலம் குழந்தைகளிடம் ஆராய்ந்து வந்தோம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த ஆராய்ச்சி மூலம் தெரிய வந்தது என்னவென்றால் தாய்மார்கள் கருவுற்ற காலத்தில் மீன் எண்ணெய் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கம் மூலம் குழந்தைகளிடம் ஏற்படும் அழற்சியை தடுக்கலாம் என்பது புரிய வந்துள்ளது.

லண்டனில் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் நட்ஸ், முட்டை, பால் மற்றும் கோதுமை போன்ற பொருட்களால் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உணவு அழற்சியால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்படாமல் சரும வடுக்கள், வீக்கம், வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளை சந்தித்து உள்ளனர்.

Fish oil supplements in pregnancy ‘may reduce allergies
ஒவ்வாமை பாதிப்பு

லண்டனில் உள்ள இம்பெரல் கல்லூரியின் மருத்துவ தலைமை ஆராய்ச்சியாளரான டாக்டர் ராபர்ட் பாயில் என்ன சொல்லுகிறார் என்றால் “எங்களது ஆராய்ச்சிப்படி புரோபயோடிக் மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளை கருவுற்ற தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் போது குழந்தைகளின் வளரும் காலத்தில் அவர்கள் உண்ணும் உணவால் ஏற்படும் அழற்சியை தடுக்கலாம்” என்பதற்கான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தோம் என்று கூறுகிறார். ஏனெனில் மீன் எண்ணெய் மாத்திரைகளில் நிறைய ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன.

இந்த ஆராய்ச்சிப்படி தற்போதைய அறிவுரை என்னவென்றால் கருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம் என்பதும் பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் சுறா, ஸ்வார்டு பிஷ் போன்றவற்றில் மெர்குரி அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்த ஆராய்ச்சியை 15,000 கருவுற்ற தாய்மார்களிடம் 19 சோதனைகள் மூலம் அவர்களை மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுக்க வைத்து ஆராய்ந்தோம். இதனால் 1000 குழந்தைகளுக்கு 31 சதவீதம் முட்டைகளால் ஏற்படும் அழற்சி தடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் புரோபயோடிக் மாத்திரைகளை எடுத்து வந்தால் மூன்று வயது வரை குழந்தைகளுக்கு ஏற்படும் எக்ஸிமா நோய் பாதிப்பு 22% வரை தடுக்கப்படுகிறது. ஆனால் இது நட்ஸ், பால் பொருட்கள், முட்டை போன்ற உணவுப் பொருட்களால் ஏற்படும் அழற்சியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
பழங்கள், காய்கறிகள் மற்றும் விட்டமின்கள் எடுத்துக் கொள்வதும் இதனுடன் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று PLOS என்ற மருத்துவ நாளிதழ் வெளியிட்டுள்ளது.

Fish oil supplements in pregnancy ‘may reduce allergies
அதிகமான சோதனைகள்

லண்டனில் உள்ள க்யூன் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுவாச தொற்று நோய் புரொபசரான சீஃஃப் ஷாஹீன் என்பவர் கர்ப்ப கால உணவுப் பழக்கத்திற்கும், தாய்ப்பாலூட்டுதல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் உணவு அழற்சி இவற்றிற்கிடையான தொடர்பை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார்.

புரோபயோடிக் மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தைகளின் பள்ளிப்பருவம் வரை அவர்களின் உணவு அழற்சியைத் தடுக்க முடியுமா என்பதை நாங்கள் மேற்கொள்ளும் வருகின்ற சோதனைகளின் முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.

Fish oil supplements in pregnancy ‘may reduce allergies
இந்த நிறைய சோதனைகளே போதுமான முடிவை நமக்கு தருகின்றன. தாய்மார்கள் மேற்கொள்ளும் உணவுப்பழக்கம் குழந்தைகளின் உணவு அழற்சியை போக்கும் என்னும் தெளிவு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டிஷ் சொசைட்டியில் நோய் எதிர்ப்பு பிரிவைச் சார்ந்த டாக்டர் லூயிஷா ஜேம்ஸ் என்பவர் என்ன கூறுகிறார் என்றால் முட்டையை போலவே மற்ற எல்லா உணவு அழற்சிக்கும் இந்த தீர்வு கிடைக்குமா என்பதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்கிறார். மேலும் இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் முட்டை அலற்சியை போலவே மற்ற உணவு அழற்சியையும் குறைக்குமா என்று கேள்வி எழுப்புகிறார்.

ஒவ்வாமையை கண்டறிய குழந்தைகளின் உணர்திறன் மிகவும் அவசியம். ஆனால் நிறைய குழந்தைகள் அலற்சி தீவிரமாகும் வரை அதன் அறிகுறிகளை உணர்வதில்லை. இதை குறைக்கவும் மீன் எண்ணெய் ஆராய்ச்சி பரிசோதனைகள் பயன்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button