ஆரோக்கிய உணவு

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

வளரும் இளம் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவினை பொறுத்து அழகாக ஜொலிக்கலாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஏனெனில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொண்டால் அதில் நிறைந்துள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடம்பில் உள்ள திசுக்களை வளர்ச்சிடைய செய்து, தோல்களின் பளபளப்புக்கு உதவுகின்றன.

என்ன சாப்பிடலாம்?

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

புரோட்டின் நிறைந்த பயறுகள், காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும். விட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1. பச்சை இலை காய்கறிகள்

2. வேரில் விளைபவை. கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

3. கிழங்குகள், தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.

4. காய்கறிகள். நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

5. காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம். 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும்,தானியங்கள் மற்றும் காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், 175 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அழகாகவும் ஜொலிக்கலாம்.
womens foods 002

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button