ஆரோக்கிய உணவு

ரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?” ~ பெட்டகம்

 

“எனக்கு ரத்தசோகை
இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB)
அளவு 9  ஆக இருக்கிறது. உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.
என்னென்ன சாப்பிட வேண்டும்?”

p60b%285%29

ரோஹையா,
மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு நிபுணர், திருச்சி.

 

p60c

“பெண்களுக்கு ஹீமோகுளோபினின் அளவு
12-க்கும் மேல் இருப்பது நல்லது. வயிற்றில் பூச்சி, சீரற்ற மாதவிடாய்,
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ரத்தசோகை வரலாம்.
கல்லீரலில் ஏதாவது பிரச்னை இருந்தால் பசி எடுக்காது. இதனால், சரிவர
சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு, ரத்தசோகையாக மாறிவிடும். ரத்தசோகை
இருப்பவர்கள், தினமும் பச்சை நிறக் காய்கறிகளைச் சாப்பிடுவது அவசியம்.
தினமும், ஒரு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எதனால் ரத்தசோகை
ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள
வேண்டும். கீரை, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, பேரீச்சம்பழம் போன்றவற்றைத்
தினமும் சாப்பிட்டுவர, இதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை
அதிகரிக்கும். அசைவ உணவு சாப்பிடுவோர் மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மண்ணீரல்
போன்றவற்றைச் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராக
இருக்கும். வயிற்றுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், சாப்பிடுவது எளிதாக
இருக்கும். இரும்புச் சத்தை அதிகரிக்க மாத்திரைகளும் சாப்பிடலாம். ஆனால்,
அதைவிட உணவுப் பழக்கத்தின் மூலம்  ஹீமோகுளோபினின் அளவை அதிகரிப்பதே
நல்லது.”


[ad_2]

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button