ஆரோக்கிய உணவு

பொரிப்பதற்கு எந்த எண்ணெய் சிறந்தது என தெரியுமா? இத படிங்க

மொறு மொறுப்பாக எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகளை விரும்பாதவர் யாருமே இருக்க முடியாது. ஆனால் எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவுகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சிலர் தவிர்க்கும் வேலையில் எண்ணெயில் பொரித்தெடுக்க பெஸ்ட் சாய்ஸ் எது என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்மோக்கிங் பாயிண்ட் :  எண்ணெய் எந்த டிகிரியில் சூடாகிறது என்பதை அதனுடைய ஸ்மோக்கிங் பாயிண்ட்டை வைத்து நாம் கண்டறிய முடியும். நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயின் ஸ்மோக்கிங் பாயிண்ட் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். ஸ்மோக்கிங் பாயிண்ட் அதிகமாக இருக்கும் எண்ணெய் வகைகளையே பொறிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

வெண்ணெய் : வெண்ணெய் போன்ற அதிக கொழுப்புள்ளவற்றில் ஸ்மோக்கிங் பாயிண்ட் மிகவும் குறைவாக இருக்கும். அதோடு அதில் ஏற்கனவே அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் எண்ணெயில் பொறித்தெடுக்கும் போது நம் உடலில் கெட்ட கொழுப்பை சேர்க்கும்..

ஆலிவ் ஆயில் : சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் ஆரோக்கியமானது ஆலிவ் ஆயில் ஆனாலும் டீப் ப்ரை செய்ய இதனை பயன்படுத்தக்கூடாது ஏனென்றால் இதன் ஸ்மோக்கிங் பாயிண்ட்டும் குறைவாகவே உள்ளது.

கடலை எண்ணெய் : மிதமான தீயில் பொரிக்கும் உணவுகளுக்கு கடலை எண்ணெயை பயன்படுத்தலாம்.இதில் இதயத்திற்கு வலுசேர்க்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.

கார்ன் ஆயில் : சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் டீப் ப்ரை செய்ய இதனை தாரளமாக பயன்படுத்தலாம். இதன் ஸ்மோக்கிங் பாயிண்ட் 453 பாரன்ஹீட் வரை உள்ள இந்த ஆயில் நம் உடலுக்கு தேவையான கொலஸ்ட்ராலை பராமரிக்க உதவுகிறது.

கடுகு எண்ணெய் : இதில் அதிகப்படியான மோனோனாசட்ரேட் செய்யப்பட்ட கொழுப்பு, ஒமேகா 3 மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. அதோடு ஸ்மோக்கிங் பாயிண்டும் அதிகமாக இருப்பதால் டீப் ப்ரைக்கு இதனை பயன்படுத்தலாம்.

சோயா எண்ணெய் : ஸ்மோக்கிங் பாயிண்ட் 450 பாரன்ஹீட் உள்ள இந்த எண்ணெயில் பொரித்தெடுக்க சிறந்தது இது. சோயா பீன்ஸில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நமக்கு கிடைக்கிறது அதிலிருக்கும் கொழுப்புச்சத்து , ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நம் உடலில் நல்ல கொழுப்பை பராமரிக்கிறது.

கனோலா ஆயில் : இதில் குறைந்தளவிலான கொழுப்புச்சத்து உள்ளது. இதன் ஸ்மோக்கிங் பாயிண்ட் 468 பாரன்ஹீட் என்பதால் இதனை தாரளமாக ப்ரை செய்ய பயன்படுத்தலாம். அதோடு மற்ற எண்ணெய்களை விட இது விலையும் குறைவு.

சூரியகாந்தி எண்ணெய் : பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் இது. ஸ்மோக்கிங் பாயிண்ட் 450 பாரன்ஹீட் வரை உள்ள இதனை தராளமாக டீப் ப்ரை செய்ய பயன்படுத்தலாம். அதோடு இதில் குறைந்த அளவே சாட்ரேட்டட் கொழுப்பு உள்ளது.

அரிசி தவிடு எண்ணெய் இதில் 47 சதவீதம் வரை மோனோ சாட்ரேட்டட் கொழுப்பும், விட்டமின் இ, ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ்,ஓலிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இதனையும் தாரளமாக டீப் ப்ரை செய்ய பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் லாரிக் ஆசிட் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உடலில் உள்ள கெட்ட பாக்டிரியாக்கள் அழிக்கவும் பயன்படுகிறது. அதோடு இதிலிருக்கும் கொழுப்பு நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் அதனை பொரிக்க பயன்படுத்தும் போது ரிஃபைண்டு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. அன்ரிஃபைன்டு பயன்படுத்தும்போது அதிலுள்ள நிறைவுறும் அமினோ அமிலங்கள் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இது நன்மையல்ல. எனவே நிறைவுறும் கொழுப்பு மற்றும் மற்ற அழுக்குகள் நீக்கப்பட்ட சுத்தகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு பயன்படுத்தலாம். அதோடு அவட்ரின் ஸ்மோக்கிங்க் பாயின்டும் அதிகம். எனவே உணவுகள் அதிகம் உறிஞ்சாமல் பயன்படுத்தலாம்.

04 1499149085 1butter

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button