ஆரோக்கிய உணவு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். மேலும் பாகற்காயில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.

பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும். பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.

பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.

கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும். பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.201704161133482448 Bitter gourd and increase resistance to disease SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button